யாழில் மது விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் பலி

0
101

யாழ்ப்பாணம் – வடமராட்சி, உப்புவல்லை பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் மதுபோதையில் இடம்பெற்ற கோஷ்டி மோதலில் 25 வயதான இளைஞன் உயிரிழந்துள்ளார்.

மது விருந்தில் உருவான வாய்த்தர்க்கமே மோதலில் முடிந்த நிலையில், சாராய போத்தல்களை உடைத்துத் தாக்கியுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் திக்கம் – நாச்சிமார் கோவிலடியை சேர்ந்த 25 வயதுடைய ஞானசேகரம் குணசோதி என்ற இளைஞன் உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்காகக் கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.

மேலும் சம்பவத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் அவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த தனியார் விடுதி பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.