பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிப்படையும் பாடசாலை மாணவர்கள்

0
445

நாட்டில் ஏற்பட்டுள்ள அத்தியாவசிய பொருள் நெருக்கடியால், பசியுடன் பாடசாலைகளுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இலங்கை தொழில் அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பாடசாலை அடிப்படையிலான போஷாக்கு நடவடிக்கைகள் கூட ஸ்தம்பிதமடைந்துள்ளதாக அதன் தலைவர் சுஜீவ விமலரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் புத்தகங்கள், காலணிகள், சீருடைகளின் விலைகள் 200% உயர்ந்துள்ளதாகவும், உணவுப் பொருட்களின் விலைகள் கடுமையாக அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

காலையில் பாடசாலைக் கூட்டத்தின் போது சில மாணவர்கள் மயங்கி கீழே விழுந்ததாகவும் அவர்கள் காலை உணவை உட்கொள்ளாதது தெரியவந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஒரு வகுப்பில் நான்கைந்து மாணவர்கள் பட்டினியுடன் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களாக இருந்ததாக தெரிவித்த அவர், தற்போது பொருளா தார நெருக்கடியால் பிள்ளைகளுக்கு உணவு வழங்க முடியாமல் பெற்றோர் திணறுவதால் அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.