லண்டன் பெண்ணை மோசம் செய்த தமிழ் இளைஞர்

0
154

 லண்டன் பெண்ணை காதலில் விழ வைத்து லட்சக்கணக்கில் பணம், நகைகளை மோசடி செய்த நபர் ஒருவர் தொடர்பில் சென்னையில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் லண்டனை சேர்ந்தவர் பார்பரா எலிசபெத் என் 67 வயதுடைய பெண் ஒருவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

எலிசபெத்தின் தாத்தா, பாட்டி பல வருடங்களுக்கு முன்னர் இந்தியா சென்றுள்ளனர். தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் வசித்த பிரித்தானிய குடும்பங்களில் இவரது குடும்பமும் ஒன்றாகும்.

பிரித்தானிய அரசு குடும்பத்திற்கு பார்பரா எலிசபெத்தின் குடும்பம் நெருக்கமானவர்கள் எனவும், இவரது சகோதரர் லண்டன் முன்னாள் மேயராக இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நீலகிரி மாவட்டம் மசினங்குடியில் மூன்று தலைமுறைகளுக்கு முன்பிருந்தே இவர்களது குடும்பத்திற்கு சொந்தமான இரண்டு வீடுகளுடன் கூடிய இரண்டு ஏக்கர் நிலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.

லண்டனில் இருந்து அவ்வபோது நீலகிரிக்கு வரும் எலிசபெத் தனது நிலங்களை கவனித்து வந்தார். இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் வந்த போது ஆங்கிலோ-இந்தியனான டொனால்ட் ஆலென் பார்கலே என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அப்போது தனியாக வசித்த எலிசபெத்தை காதல் வலையில் வீழ்த்திய டொனால்ட் பார்கலே திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்ததுடன், அவரது வீட்டிலேயே வசித்து வந்துள்ளார்.https://googleads.g.doubleclick.net/pagead/ads?us_privacy=1—&client=ca-pub-3603232726550318&output=html&h=280&a

இதன்போது பிரித்தானிய பெண்ணின் கடன் அட்டை மற்றும் டெபிட் அட்டை எடுத்து அதில் இருந்து 25 லட்ச ரூபாய் பணத்தை பெற்றுள்ளார். மேலும், இவர் திருமணம் செய்து கொள்வதாகக் கூறியதை நம்பி லட்சக்கணக்கில் மதிப்புடைய வைரம், பிளாட்டினம் நகைகளை டொனால்ட் ஆலென் பார்கவே அவருக்கு வாங்கிக் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு டொனால்ட் தன்னை மோசடி செய்வதை உணர்ந்ததால் தான் விலகிவிட்டதாகவும் ஆனால் தன்னை திருமணம் செய்துவிட்டதாக தனது பெயரை, தனது கணவன் எனக்கூறி பலரிடமும் லட்சக்கணக்கில் கடன் வாங்கி மோசடி செய்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் டொனால்ட் ஆலென் பார்கலே மூலம் அறிமுகமான மார்கஸ் என்ற நபரும் மசினகுடியில் உள்ள பழங்குடி மக்களுக்கு 100 வீடுகளை கட்டித் தரலாம் என தன்னிடம் கூறி தனது பெயர் மற்றும் கையெழுத்தை பயன்படுத்தி லட்சக்கணக்கில் மோசடி செய்திருப்பதாகவும் எலிசபெத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த இருவர் தொடர்பிலும் பாதிக்கப்பட்ட பெண் சென்னை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள்ளதாக கூறப்படுகின்றது.