காலிமுகத்திடலில் பொலிஸாரின் நடவடிக்கையால் பதற்றம்!

0
84

போக்குவரத்துக்கு இடையூறாக காலி முகத்திடல் சுற்றுவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையை அகற்றுவதற்கு பொலிஸார் இன்று காலை நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இதையடுத்து வீதியோரத்தில் மேடை அமைக்க போராட்டக்காரர்கள் நடவடிக்கை எடுத்தனர்.

இதேவேளை, அலரிமாளிகைக்கு முன்பாக ‘மைனா கோ கம’ போராட்டம் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றமது.

காலி முகத்திடலில் இருந்து மக்கள் குழுவொன்று அப்பகுதிக்கு வந்ததையடுத்து, பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதேவேளை, ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி காலி முகத்திடலில் மக்கள் நடத்திய போராட்டம் இன்றுடன் 23 நாட்களை கடந்துள்ளது.

காலி முகத்திடலில் இன்று காலையிலும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை காணமுடிந்தது.