விமானியின் சிகரெட்டால் விமானத்துக்கு நேர்ந்த கதி!

0
67

கடந்த 2016 ஆம் ஆண்டு 66 பேர் உயிரிழந்த எகிப்து விமான விபத்துக்குக்கான  காரணம்  தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதில், குறித்த விமானத்தின் விமானி பிடித்த சிகரெட்டே இதற்கு காரணம் என்று பிரான்ஸ் விமான போக்குவரத்து நிபுணர்களின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாரிஸின் கார்ல்ஸ் டி கவுல்லே விமான நிலையத்தில் இருந்து கெய்ரோவை நோக்கி புறப்பட்ட இந்த விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில் விமானி முஹமது செயித் ஷுகைர்(Muhammad Saeed Zuhair), நடுவானில் புகை பிடித்தபோது, அவரது சிகரெட் விமானி அறையில் இருக்கும் ஒட்சிசன் முகமூடியில் இருந்து ஒட்சிசன் கசிவை ஏற்படுத்தி இருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேசமயம் விமானத்தின் கறுப்புப் பெட்டி தரவு அடிப்படையிலேயே நிபுணர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகின்றது.