உலகம் இனிமேல் தான் அணு குண்டை பார்க்க உள்ளது – ரஷ்யா

0
87

நேட்டோ நாடுகள் உக்கிரைனுக்கு ஆயுதங்களை அள்ளி வழங்கி, ரஷ்யாவை நேரடியாக பகைத்துள்ளதாக ரஷ்யாவின் வெளிநாட்டமைச்சர் செர்கே லாவ்ரோவ் (Sergeĭ Viktorovich Lavrov) தெரிவித்துள்ளார்.

எனவே இனி நேட்டோ நாடுகளுடன் எமது யுத்தத்தை ஆரம்பிக்க நேரிடும் என்று எச்சரித்த செர்கே லாவ்ரோவ் (Sergeĭ Viktorovich Lavrov) இனி தான் உலக நாடுகள் அணு குண்டை பார்க்கபோகிறார்கள் என கடும் தொனியில் எச்சரித்துள்ளார்.

ரஷ்யா சமீபத்தில் பரிசோதனை செய்த, சாத்தான் 2 ஹைப்பர் சோனிக் ஏவுகணை, 41 சிறிய ரக அணு குண்டை சென்று பல இடங்களில் போட வல்லது. இதனை பாவித்து பிரித்தானியாவின் முக்கிய நகரங்களை அழிக்க முடியும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.

அத்துடன் உகரைன் ரஷ்ய போர் தொடங்கியதில் இருந்து அணு குண்டை பாவிப்பது தொடர்பாக தொடர்ச்சியாக பல அறிவித்தல்களை வெளியிட்டு உலக நாடுகளை ரஷ்யா மிரட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.