குண்டர்களை இயக்கும் கொடூரன் புடின் – பிரிட்டன்

0
106

உக்ரைன் – ரஷ்ய போர் இன்னும் 10 ஆண்டுகளுக்கு நீடிக்குமென பிரிட்டன் வெளியுறவுத்துறை செயலர் லிஸ் டிரஸ் ( Liz Dress) தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் வெளியுறவுத்துறை மாநாட்டில் கலந்து கொண்டு ரஷ்ய-உக்ரைன் போர் குறித்துப் பேசிய அவர் ( Liz Dress) , ரஷ்ய உக்ரைன் போர் இன்னும் 10 ஆண்டு காலத்துக்கு நீடிக்கும் என கூறினார்.

அதோடு குண்டர்களை இயக்கும் கொடூரமான இயக்குனர் என்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை அவர் விமர்சித்தார்.

எனவே ஐரோப்பிய நாடுகள் இன்னும் பல ஆண்டு காலத்துக்கு நடைபெற உள்ள இந்த போருக்கு தயாராக வேண்டும் என்றும் பிரிட்டன் வெளியுறவுத்துறை செயலர் லிஸ் டிரஸ் ( Liz Dress) மேலும் தெரிவித்தார்.