சீமெந்து விலையேற்றத்தால் தடம் மாறிய தம்பதியினர்!

0
131

ஹொரணை பிரதேசத்தில் பெண்ணொருவரின் தங்க நகைகளை அபகரித்துவிட்டு தப்பிச் சென்ற சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அதேசமயம், தங்க நகைகளை அடகு வைத்த சந்தேக நபரின் மனைவியையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹொரணை ஸ்ரீபாலி பல்கலைக்கழக வீதியில் பெண்ணொருவரின் தங்க நகைகளை சந்தேக நபர் திருடியுள்ளார்.

பின்னர், சம்பவம் தொடர்பில் ஹொரண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது, அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராவில் திருட்டுச் சம்பவம் பதிவாகியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் 24 மணித்தியாலங்களில் தங்க நகைகளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாரின் விசாரணையில் சந்தேக நபர் கொத்தனார் வேலை செய்வதாக தெரிவித்துள்ளார். சீமெந்து மற்றும் ஏனைய கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வினால் வருமானம் குறைந்ததால் தங்க நகைகளை எடுக்க தீர்மானித்ததாக சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.