எரிபொருள் தட்டுப்பாட்டால் இலங்கையில் நேர்ந்த அவலங்கள்!

0
117

இலங்கையில் கடந்த முன்று மாதங்களுக்கு மேலாக எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதனால் நாட்டு மக்கள் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பல தடவைகள் எரிபொருட்களுடன் கப்பல்கள் நாட்டிற்கு வருகை தந்தாலும் இன்றுவரை எரிபொருள் தட்டுப்பாடுக்கு தீர்வு வழங்கப்படவில்லை.

இவ்வாறான நிலையில் கடந்த சில வாரங்களாக எரிபொருளை பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த ஐந்திற்கு அதிகமானோர் மரணமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் வடக்கு களுத்துறை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் வரிசையில் நின்ற 63 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் இன்று காலை 7 மணியளவில் மண்ணெண்ணெய் கொள்வனவு செய்வதற்காக வரிசையில் நின்றிருந்த நிலையில் மதியம் 1 மணியளவில் குறித்த நபர் மயங்கி விழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.