நள்ளிரவை தாண்டி போராட்டம் நடத்திய மதத்தலைவர்கள்!

0
93

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராகவும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரியும் இரண்டு வாரங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிரான ஜனாதிபதி செயலகம் முன்னால் நடைபெற்றுவரும் தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் இருபதாவது நாளை எட்டியுள்ளது.

இந்த நிலையில் காலிமுகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலகம் முன்னால் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களுக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகின்றது.

இதேவேளை கோட்டாபய அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி மாத்தறை கோட்டா கோ கம கிளையில் மதத்தலைவர்கள் மேற்கொண்டுவரும் ஆர்ப்பாட்டம் இன்று நள்ளிரவை கடந்த நிலையிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.