விலைப்பட்டியல் வைத்திருக்க நுகர்வோர் விவகார சபை (CAA) உத்தரவு பிறப்பிப்பு

0
89

அனைத்து உற்பத்தியாளர்கள், தயாரிப்பாளர்கள், கடை உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் இப்போது தங்கள் வசம் உள்ள பொருட்களுக்கான பில், விலைப்பட்டியல் வைத்திருக்க வேண்டும் என்று நுகர்வோர் விவகார சபை (CAA) அறிவித்துள்ளது.

இந்த உத்தரவு ஏப்ரல் 27 முதல் அமுலுக்கு வருகிறது. பில் அல்லது விலைப்பட்டியல் சப்ளையரின் பெயர் மற்றும் முகவரி, வாங்கிய திகதி, விலை, பொருட்களின் வகை, அளவு மற்றும் தொகுதி எண் ஏதேனும் குறிப்பிட வேண்டும். நுகர்வோர் விவகார சபை தலைவர் சாந்த திசாநாயக்க கூறியுள்ளார்.