ஹெரோயின் கடத்தமுற்பட்ட தமிழ் இளைஞனுக்கு சிங்கப்பூரில் மரண தண்டனை!!

0
122

மூன்று தேக்கரண்டி ஹெரோயின் போதைப்பொருள் கடத்த முயன்ற நாகேந்திரன் தர்மலிங்கம் என்ற இளைஞனுக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் மரணதண்டனையை உறுதிப்படுத்தியுள்ளது.

கடத்தல்காரருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்ததை அவரது சகோதரி ஷர்மிளா தர்மலிங்கம் பத்திரிகையாளர்யிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

நாகேந்திரன் தர்மலிங்கம் மூன்று ஸ்பூன் ஹெராயின் போதைப்பொருளை சிங்கப்பூருக்குள் கொண்டு வர முயன்றதற்காக ஒரு தசாப்தத்திற்கும் மேலாக மரண தண்டனை விதிக்கப்பட் நிலையில் சிறையில் இருந்துவந்தார்.

நீண்டகாலமாகவே அவரது வழக்கு மிகவும் சர்ச்சைக்குரியதாக இருந்துவந்தது. ஏனெனில் அவர் ஒரு மருத்துவ நிபுணரால் IQ 69 என்று கூறப்படுகின்ற அறிவுசார் இயலாமை உடைய ஒருவர் என்று சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில், அவர் மீது மரண தண்டனை நிறைவேற்றப்படுவது தாமதிக்கப்பட்டு வந்தது.

ஆனால் நாகேந்திரன் தர்மலிங்கம் தனது செயல்களின் தன்மையை தெளிவாக புரிந்து கொண்டே அந்தக் குற்றத்தைப் புரிந்தார் என்று என்று அரசாங்கம் கூறிவந்தது.

இந்த நிலையில், அவரது தாயாரின் கடைசி மேல்முறையீட்டை செவ்வாய்க்கிழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

2009 ஆம் ஆண்டில்இ நாகேந்திரன் தனது இடது தொடையில் 43 கிராம் (1.5 அவுன்ஸ்) ஹெராயினைக் கட்டிக் கொண்டு மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குக் கடக்கும்போது பிடிபட்டார்.

சிங்கப்பூர் சட்டத்தின் கீழ், 15 கிராமுக்கு மேல் ஹெராயின் கொண்டு பிடிப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.

விசாரணையின் போது, 34 வயதான அவர் முதலில் போதைப்பொருளை எடுத்துச் செல்ல வற்புறுத்தப்பட்டதாகக் கூறினார், ஆனால் பின்னர் தனக்கு பணம் தேவைப்பட்டதால் குற்றத்தைச் செய்ததாகக் கூறினார்.

விசாரனைகளின் பின்பு அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

2015 ஆம் ஆண்டில், அவர் அறிவுசார் இயலாமையால் பாதிக்கப்பட்டதன் அடிப்படையில் தனது தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்று மேல்முறையீடு செய்தார்.

இறுதியில், அவர் அறிவுசார் ஊனமுற்றவர் அல்ல என்று நீதிமன்றம் கண்டறிந்தது.

கடந்த ஆண்டு ஜனாதிபதியின் கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டது.

கேள்விக்குரிய குற்ற நடத்தையுடன் தொடர்புடைய அபாயங்கள் மற்றும் எதிர்விளைவு நன்மைகளை எடைபோட்டு, இது ஒரு கிரிமினல் மனதின் செயல் என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் கண்டறிந்தது என்று சிங்கப்பூர் உள்துறை அமைச்சகம் முந்தைய அறிக்கையில் கூறியிருந்தது.