மக்கள் போராட்டம் தொடர்பில் நாமல் ராஜபக்க்ஷ வெளியிட்ட கருத்து!

0
83

இலங்கையில் தற்போது இருக்கும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அரசியல்வாதிகளும், பொதுமக்களாலும் பல்வேறுபட்ட ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

இந்த நிலையில், கொழும்பு காலி முகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலகம், அலரி மாளிகை போன்ற பகுதிகளில் இரவு பகலாக தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது.

மேலும்,  அரசாங்கத்திற்கு எதிராக நாடாளுமன்றில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்து நிறைவேற்றுவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தயாராகி வருகின்றது.

இப்படியென நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் நாமல் ராஜபக்ஷ (Namal Rajapaksa) தனது ருவிற்றர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

அரசாங்கத்திற்கு எதிராக பொது மக்கள் ஒரு பகுதியினர் மும்முரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். எதிர்க்கட்சியினர் மார்ச் மாதம் போராட்டம் நடத்துவதில் மும்முரமாக உள்ளனர்.

ஆளும் கூட்டணி பிளவுபட்டு பெரும்பான்மையை உருவாக்க முயல்கிறது, நாடு தவித்து கொண்டிருக்கும் வேளையில்! நாம் உண்மையில் கையில் உள்ள பிரச்சனைகளை பேசுகிறோமா அல்லது மும்முரமாக இருக்கிறோமா? வெவ்வேறு நிகழ்ச்சி நிரல்களா? என குறிப்பிட்டுள்ளார்.