பாரிஸில் பொலிஸார் நடத்திய அதிரடி; 35 நபர்கள் கைது

0
110

பாரிஸில் பொலிஸார் நடத்திய அதிரடி நடவடிக்கையில் 35 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீதியோர வியாபாரிகளை இலக்கு வைத்து இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பாரிசாலைக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வரத் தொடங்கியுள்ளதால், உரிமம் இல்லாத தெருவோர வியாபாரிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

சுற்றுலாப் பயணிகளுக்கு தரமற்ற சில பொருட்களை விற்பனை செய்வதாகக் கூறப்பட்டு, அதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். பலரை பொலிஸார் கைது செய்து அவர்களிடம் இருந்து சில பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மொத்தம் 35 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 23 பேர் தெருவோர வியாபாரிகள் மற்றும் 12 பேர் சுற்றுலா பயணிகளை குறிவைத்து கொள்ளையடித்தவர்கள். 200 கிலோ எடையுள்ள பொருட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Touk-touk எனப்படும் முச்சக்கர வண்டிகளின் 26 சாரதிகளுக்கு விதிகளை மீறிய குற்றத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 150 பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.