விமான நிலைய செயற்பாடுகள் முடக்கமா?

0
104

இன்று நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்ட போதிலும், கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் கொழும்பு துறைமுகத்தின் நடவடிக்கைகள் வழமையாக இடம்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களே இன்று கடமைக்காக வந்துள்ளதாக துறைமுக தொழிற்சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன.

அதேசமயம் துறைமுகத்தில் ஏற்கனவே சுமார் 5 சரக்கு கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாகவும், அவற்றின் கொள்கலன்களை இறக்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபைக் குச் சொந்தமான பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் இன்று வழமையாக இயங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.