லண்டனில் இரு இலங்கையர்களுக்கு நேர்ந்த கொடூர சம்பவம்!

0
343

கிழக்கு லண்டனில் உள்ள பகுதியொன்றில் 15 பேர் கொண்ட குழுவொன்று மேற்கொண்ட தாக்குதலில் இரு இலங்கையர்கள் படுகாயமடைந்துள்ளதாக அங்குள்ள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் கடந்த செவ்வாய்கிழமை இரவு கிழக்கு லண்டனில் – ஈஸ்ட் ஹாம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மேலும் இந்த தாக்குதலை போத்தல்கள் மற்றும் ஹொக்கி மட்டைகளை ஏந்திய வன்முறையாளர் குழுவொன்று இந்த தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்தக் குழு ஈஸ்ட் ஹாமில் உள்ள இலங்கை முஸ்லிம் மையத்திற்கு இப்தார் சாப்பிடச் சென்றவர்களை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்கிழமை இரவு 9 மணியளவில் பார்கிங் வீதி மசூதிக்கு வெளியே ஹொக்கி மட்டைகள், பீர் பாட்டில்கள், ஃப்ளோரசன்ட் லைட் டியூப்கள் மற்றும் கற்களுடன் ஆயுதம் ஏந்திய சுமார் 15 ஐரோப்பிய ஆண்கள் இருந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

இதன் போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் கண்ணாடி உடைந்ததில் இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கையர்களுக்கு சொந்தமான ஆவணங்கள் சிலவற்றையும் இந்த கும்பல் தீ வைத்து எரித்துள்ளனர்.

இதனால் முக்கியமான ஆவணங்களை அவர்கள் இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரும் முன்னதாக சந்தேகநபர்கள் அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகின்றது.

அதிகாரிகள் அப்பகுதியில் சோதனை நடத்திய போதிலும், சந்தேக நபர்களின் தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை. அங்குள்ள சிசிரிவி காணொளியின் உதவியுடன் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.