சமிந்த லக்சானின் மரணம் ஒரு “கொலை“ – சஜித் பிரேமதாச

0
334

ரம்புக்கண துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சமிந்த லக்சானின் மரணம் ஒரு கொலை எனவும் அது ஒரு குற்றவியல் சார்ந்த குற்றம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

சமிந்த லக்சானின் கொலையுடன் தொடர்புடைய அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ரம்புக்கண துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சமிந்த லக்சானின் வீட்டிற்கு சஜித் பிரேதமாச தனது பாரியாருடன் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை நடத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.

குடும்பத்தின் அத்தியாவசிய எதிர்கால செயற்பாடுகளுக்காக நிதியுதவி வழங்கிய எதிர்க்கட்சித் தலைவர், தேவைப்படும் அனைத்து நேரங்களிலும் ஐக்கிய மக்கள் சக்தியாகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் துணைநிற்பதாக உறுதியளித்தார்.

Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery