யாழில் திருடிய பொருட்களுடன் திருடன் அதிரடி கைது!

0
143

யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரதேசத்திற்குட்பட்ட கோண்டாவில் தில்லையம்பலம் பகுதியில் நேற்று அதிகாலை இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் சந்தைக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கோண்டாவில் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று அதிகாலை கோண்டாவில் தில்லையம்பலம் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் நுழைந்த திருடன் பெருமதியான கைத்தொலைபேசி மற்றும் 30 ஆயிரம் ரூபாய் பணம் என்பவற்றை திருடிச் சென்று இருந்தார்.

இச் சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் யாழ். மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அவர்களின் கீழ் இயங்கும் விசேட புலனாய்வு பொலிஸார் , சந்தேக நபரை கைது செய்ததுடன் திருடிய பணம் மற்றும் கைத்தொலைபேசியினையும் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைக்காக கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.