இலங்கையில் ரஷ்ய பிரஜை மீது தாக்குதல்

0
167

ரஷ்ய பிரஜை ஒருவரை இலவங்கப்பட்டையால் தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டில் இருவரை அஹங்கம காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் அஹங்கம, கத்தலுவ, எஸ்.கே தோட்டத்தில் வசிக்கும் முச்சக்கர வண்டி சாரதி மற்றும் அவரது நண்பராவர்.

அஹங்கம, கபாலன பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த ரஷ்ய பிரஜை, வல்ஹெங்கொட கடற்கரையில் வைத்து தாக்கப்பட்டதாகவும், அவர் சுற்றுலா வழிகாட்டி ஒருவருடன் பேசிக் கொண்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.