நிறைவேற்று அதிகார முறையை ஒழிக்க முழு ஆதரவு வழங்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி!

0
97

அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டத்தில் திருத்தம் செய்து நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் முறைமையை ஒழிப்பதற்கான எந்தவொரு பிரேரணைக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழு முழுமையாக ஆதரவளிக்கும் என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும், முன்னாள் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிக்கும் பிரேரணை கொண்டு வரப்பட்டால் ஒரு கையை அல்ல இரண்டு கைகளையும் உயர்த்தி அதற்கு அங்கீகாரம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.