கோட்டாபய பதவி விலகினால் மட்டுமே தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண முடியும்: அனுரகுமார திசாநாயக்க தெரிவிப்பு

0
118

சிறிலங்கா அரச தலைவர் பதவி விலகினால் மாத்திரமே தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண தமது கட்சி ஆதரவளிக்கும் என அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் அரச தலைவர் ஆசனத்தில் இருந்துகொண்டு கோட்டாபய ராஜபக்ஷ வழங்கும் எந்தவொரு தீர்வையும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து இன்று இடம்பெற்ற விவாதத்தின் போதே மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

கோட்டாபய வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்றே இந்நாட்டு மக்கள் விரும்புகின்றனர் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இன்னொருபக்கம் மக்கள் தங்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ளவும் விரும்புவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை ஊடகவியலாளர்கள் தமது கடமைகளை தடையின்றி மேற்கொள்ள அனுமதிக்கப்படுவதை நாம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்