ரஷ்யா தன் தாக்குதலை நிறுத்தும் வரை எம் தற்காப்பு முயற்சிகளை கைவிடப்போவதில்லை ஸெலன்ஸ்கி அறிவிப்பு!

0
532

சமாதானப் பேச்சுக்களின் ஆரம்ப அறிகுறிகள் சாதகமாக இருந்தாலும், அவை ரஸ்யர்களின் குண்டு தாக்குதல்களை இன்னும் நிறுத்தவில்லை என்று உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இரவு நேர தொலைக்காட்சி உரையில், கருத்துரைத்த அவர் தனது நாடு எந்தவொரு பேச்சுவார்த்தைகளின் உறுதியான முடிவுகளில் மட்டுமே நம்பிக்கை கொள்ள முடியும் என்று கூறியுள்ளார்

இன்னும் கூடுதலான தாக்குதல்களை நடத்துவதற்கு குறிப்பிடத்தக்க ஆற்றலை ரஸ்யா கொண்டிருக்கிறது.

எனவே உக்ரைன் தனது தற்காப்பு முயற்சிகளை குறைக்காது என்றும் ஸெலன்ஸ்கி உறுதியளித்தார்.

படைகளை குறைக்கும் ரஸ்யாவின் அறிவிப்பு, சண்டைக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை உக்ரைனின் மாரியுபோல் நகரில் கடினமான மனிதாபிமான சூழ்நிலையைத் தீர்க்க உக்ரைனின் தேசியவாத போராளிகள், ஆயுதங்களை கைவிடவேண்டும் என்று ரஸ்ய ஜனாதிபதி புடின் வலியுறுத்தியுள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனுடன் நேற்று இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின்போது அவர் இந்த நிபந்தனையை விதித்துள்ளார்

இரு தலைவர்களும் உக்ரைனில் மனிதாபிமான முயற்சிகளை மையமாகக் கொண்டு தற்போதைய முன்னேற்றங்கள்” பற்றி விவாதித்ததாக ரஸ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.