இலங்கையில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி !

0
309

இலங்கையில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.

மார்ச் மாதத்தில் கொவிட் வைரசு தொற்றாளர்கள் மற்றும் இறப்புகள் குறைவடைந்து வருகிறது .இருப்பினும் தொடர்ந்து சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறும் சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.

சுகாதார அமைச்சின் மருத்துவ தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அன்வர் ஹம்தானி திங்கள்கிழமை (14) செய்தியாளர்களிடம் கூறுகையில், மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை நிலையங்களில் கொவிட் தொற்றாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட தங்குமிட வசதிகளில் 28 வீதமானோர் மட்டுமே தற்போது தங்குவதாகவும். ஏனையோர் தமது வீட்டிலேயே தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுகின்றனர் எனவும் கூறியிருந்தார்.

அத்துடன் ‘நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு 350 முதல் 400 ஆகக் குறைந்துள்ளது, அதே நேரத்தில் தினசரி இறப்புகள் ஒரு நாளைக்கு 10க்கும் குறைவாக குறைவடைந்துள்ளன’ என்றும் ஹம்தானி மேலும் கூறியிருந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (13) நாட்டில் புதிதாக 311 நோயாளிகள் காணப்பட்டுளள்னர். இது நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையினை 6 இலட்சத்து 56 ஆயிரத்து 41 ஆக அதிகரித்துள்ளது.

தற்போழுது சிகிச்சை நிலையங்களில் 16 ஆயிரத்து 397 பேர் சிகிச்சை பெற்று வருவதுடன், 3 ஆயிரத்து 125 நோயாளிகள் மட்டுமே தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 58 நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர் மேலும் தெரிவிக்கையில், அரச மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளில் 41 வீதம்  ஓக்சிஜன் பெற்று வருவதுடன், கடந்த இரண்டு வாரங்களுடன் ஒப்பிடுகையில் இது 30 வீதமாக குறைவடைந்துள்ளதாகவும் கூறினார்.

கொவிட்-19 தடுப்பூசி திட்டம் மற்றும் பொது மக்களின் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுதலே தொற்று குறைவதற்கு முக்கிய காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்..

ஆலோசனை வழிகாட்டுதல்களை சுகாதார அமைச்சு சிறந்த முறையில் செயற்படுத்தி வருவதாகவும், இருப்பினும் ‘இந்தக் குறைவு காரணமாக,கொவிட் வைரசு தொற்று  இப்போது முடிந்துவிட்டது என்று யாரும் நினைக்க வேண்டாம். எதுவும் நிரந்தரம் இல்லை, இந்த நிலைமை மாறலாம், எனவே அனைவரும் தங்கள் கடமையைச் செய்து, தொற்றினை குறைவடைய செய்ய தொடர்ந்து பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியிருந்தார்.

‘நீங்கள் தடுப்பூசி போடவில்லை என்றால், தயவுசெய்து  தடுப்பூசியினை எடுத்துக் கொள்ளுங்கள், ஏனென்றால் அது உங்களை மட்டுமல்ல, உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் பாதுகாக்கும் எனவும், உயிர்களை காப்பாற்றுவதற்கு தடுப்பூசியை ஏற்றிக்கொள்வது அவசியம்’ என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

உத்தியோகபூர்வ தரவுகளின்படி, இலங்கையில் , 16.9 மில்லியன் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் வழங்கப்படுள்ளதுடன் 14.2 மில்லியன் பேர் இரண்டாவது டோஷினையும் பெற்றுள்ளனர். இருப்பினும், இதுவரை 7.5 மில்லியன் மக்கள் மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி  டோஸ் போட்டுள்ளனர்.

 1562 கொரோனா இறப்புகள் ஏற்றப்படுள்ளன.

சுகாதார அமைச்சு கோவிட்-19 கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ள நிலையில், ஜனவரி மாத இறுதியில் இருந்து பெப்ரவரி முழுவதும் நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் இறப்புகள் அதிகரித்துள்ளன. இந்த காலகட்டத்தில், தினசரி கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,000 க்கும் அதிகமாக அதிகரித்தது. அதே நேரத்தில் தினசரி 25-35 இறப்புகளும் நிகழ்ந்தன. எவ்வாறாயினும், பூஸ்டர் டோஸ் பெற அதிகமானோர் வருவதால், நிலைமை கட்டுப்பாடுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். 

சுகாதார அதிகாரிகள் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகின்றனர்’ என்றும் ஹம்தானி கூறியிருந்தார்.