கொரோனா கற்றுக் கொடுத்த பாடங்கள் – ஐஸ்வர்யா ராஜேஷ்

0
306

உலக மக்கள் அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்த கொரோனா வைரஸ் கற்றுக் கொடுத்த பாடங்கள் பல என்று கூறினார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

“கொரோனா கடந்த ஒரு ஆண்டில் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியம் என்பதை உணர வைத்து இருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி ஒவ்வொருவருக்கும் எவ்வளவு முக்கியம் என்பதையும் ஞாபகப்படுத்தி இருக்கிறது. இயற்கையை நாம் கண்டு கொள்ளாமல் இருந்தோம். இப்போது அதற்கு பயப்பட வேண்டும். மரியாதை கொடுக்க வேண்டும் என்று புரியவும் வைத்துள்ளது.

உடற்பயிற்சி எல்லோரது வாழ்க்கையிலும் முக்கியமானது. அது தைரியத்தை கொடுக்கும். வேலை செய்வதிலும் உற்சாகத்தை அளிக்கும். நேர்மறை வாழ்க்கையை பழக்கப்படுத்தும். நான் இன்னும் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட நிறைய முன் எச்சரிக்கைகளை எடுத்துக்கொள்ள திட்டமிட்டு இருக்கிறேன். நமது முன்னோர்கள் சாப்பிட்ட ராகி, சோளம் போன்ற தானியங்கள் எனது உணவில் இருப்பது மாதிரி பார்த்துக்கொள்கிறேன். நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிக்கவும் முயற்சி செய்து வருகிறேன். இது கடந்த ஆண்டில் நான் கற்றுக்கொண்ட பாடங்கள்.” என்றார் ஐஸ்வர்யா ராஜேஷ்.