பாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு!

0
810

கடந்த 9 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை கலைத்தமையை எதிர்த்து உயர் நீதிமன்றில் மொத்தமாக 14 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. High court Case Sri Lanka Tamil News

குறித்த மனுக்களில் பிரதிவாதிகளாக ஜனாதிபதி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இவற்றில் 10 மனுக்கள் மீதான விசாரணை இன்று மதியம் 2 மணியளவில் நடந்தது. பிரதம நீதியரசர் நளின் பெரேரா மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளான பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன ஆகியோர் முன்னிலையில் குறித்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது..

மேலும் மனுக்கள் மீதான விசாரணைகள் நாளை (13) காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

அழுத்தங்களுக்கு பயந்து பின்வாங்க போவதில்லை! பேரணியில் மைத்திரி சூளுரைப்பு!

பெரும்பான்மை நிரூபிக்கும் வரை ரணிலே பிரதமர்! சபாநாயகர் அறிக்கை!

பிரதமர் மகிந்த தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு!

பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!

Tamil News Group websites