இங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது

0
911
first use cannabis UK legalized

இங்கிலாந்தில் முதல்முறையாக இன்றுமுதல் நடைமுறைக்கு வரும் சட்டத்தின்படி நோயாளிகள் மருத்துவ நிபுணரின் பரிந்துரையின் பின்னர் கஞ்சாவிலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகளை பெற்றுக்கொள்ளமுடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. first use cannabis UK legalized

மற்றைய மருந்துகளைவிடவும் கஞ்சாவைப் பிரதானமாகக் கொண்ட மருந்துகள் நோயாளிகளுக்கு நிச்சயமாக உதவக்கூடிய சந்தர்ப்பங்களில் மட்டுமே மருத்துவ நிபுணர்கள் கஞ்சா மருந்துகளை பரிந்துரை செய்யமுடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரிதான, கடுமையான கை,கால் வலிப்பு உள்ள குழந்தைகள், கீமோதெரபி மூலம் வாந்தி அல்லது குமட்டல் கொண்ட மற்றும் ஸ்களீரோசிஸ் காரணமாக தசை விறைப்பு கொண்ட நோயாளிகளுக்கு கஞ்சாவிலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகள் பரிந்துரை செய்யப்படலாம்.

ஆனாலும் இச்சட்டம் நிச்சயமாக கஞ்சா புகைத்தலை சட்டபூர்வமாக்குவதற்கான ஒரு ஆரம்பமாக அமையாது எனவும் கஞ்சா புகைத்தலுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் நடைமுறையிலிருக்குமெனவும் உள்துறை அமைச்சர் சஜித் ஜாவிட் உறுதியளித்துள்ளார்.

tags :- first use cannabis UK legalized

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

  ********************************************

தொடர்புடைய ஏனைய தளங்கள்

**********************************************