காஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி

0
307
Rahul Gandhi says Kashmir turmoil Modi wrong policies

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தவறான கொள்கைகள் மற்றும் அவர் செய்த தவறுகள் காரணமாக இன்று காஷ்மீரில் கொந்தளிப்பான நிலை உருவாகியுள்ளதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். (Rahul Gandhi says Kashmir turmoil Modi wrong policies)

மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி ஈடுபட்டுள்ளார்.

மால்வா, நிமார் பிராந்தியத்தில் தேர்தல் பிரசாரம் செய்த போது உச்ஜைனியில் உள்ள மகா காளீஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து இந்தூரில் ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்று வாக்கு சேகரித்த போது மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பிரதமர் மோடி எங்கு சென்றாலும் ‘சர்ச்ஜிக்கல் ஆபரேஷன்’ பற்றி பேசுகிறார். ஆனால், அங்கு என்ன நடந்து கொண்டு இருக்கிறது?

மோடியின் தவறான கொள்கைகள், அவர் செய்த தவறுகள் காரணமாக இன்று காஷ்மீரில் கொந்தளிப்பான நிலை உருவாகியுள்ளது.

பயங்கரவாதிகள் ஊடுருவல் அதிகரித்து இருக்கின்றது. அவர்கள் தினந்தோறும் தாக்குதலில் ஈடுபடுகின்றார்கள். நமது இராணுவ வீரர்கள் உயிர் தியாகம் செய்யும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

காஷ்மீரில் ஒரு குழப்பமான நிலையை பிரதமர் மோடி உருவாக்கி விட்டார். மத்திய பிரதேசத்தில் தொடர்ந்து 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வரும் பாரதிய ஜனதாவால் மாநிலத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை.

முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் 20 ஆயிரம் வாக்குறுதிகளை கொடுத்தார். ஆனால், அதில் ஒன்றை கூட அவர் நிறைவேற்றவில்லை.

மாநிலத்தில் உள்ள ஜவுளி ஆலைகள் எல்லாம் மூடப்பட்டு வருகின்றன. சீனாவில் இருந்து தாராளமாக துணிகளை இறக்குமதி செய்ததுதான் இதற்கெல்லாம் காரணம். விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய இந்த அரசு எந்த முயற்சியும் செய்யவில்லை.

நாங்கள் இந்த மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால் பதவி ஏற்ற 10 நாளில் விவசாயிகளின் கடன்களை ரத்து செய்வோம். நாங்கள் உருவாக்கும் முதலமைச்சர் 24 மணி நேரத்தில் 18 மணி நேரம் மக்களுக்காக உழைப்பவராக இருப்பார். அவர் இளைஞர்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொடுப்பார் என்றும் ராகுல்காந்தி கூறியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

இரட்டை பெண் குழந்தைகளை பெற்ற தந்தையே விற்ற அவலம்

டெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை

என் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி

தமிழ் நாடு முழுவதும் சத்துணவு ஊழியர்கள் போராட்டம்

மகிந்த ராஜபக்ச சர்வதேச குற்றவாளி; அமைச்சர் ஜெயக்குமார்

சபரிமலை கலவரத்தில் ஈடுபட்ட 3505 பேர் கைது

Tamil News Group websites

Tags; Rahul Gandhi says Kashmir turmoil Modi wrong policies