இன்று 84 ஆவது நாளாகவும் அகழ்வுப் பணிகள் தொடர்கிறது! 175 மனித எலும்புக்கூடுகள் மீட்பு!

0
456

இதுவரை மன்னார் ச.தொ.ச.விற்பனை நிலைய வளாகத்திலிருந்து 175 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அங்கு அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக விசேட சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் 84 ஆவது நாளாகவும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இது வரை 175 மனித எலும்புக்கூடுகள் குறித்த வளாகத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் 169 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு மன்னார் நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. ஏனைய எலும்புக் கூடுகளை மீட்கும் பணி தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.

மேலும் மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றுக்கு மன்னார் நீதிமன்றத்தின் அனுமதி கிடைத்தவுடன் காபன் பரிசோதனைக்கு புலோரிடவுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிய வருகின்றது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

மைத்திரிக்கு நன்றியுடன் இருக்க வேண்டும்! சஜித் பிரேமதாச!

கோத்தாபாய வழக்கை தொடர்ந்து விசாரிக்க முடிவு!

சீரற்ற காலநிலை : இராணுவம் தயார் நிலையில்!

மகிந்த – மைத்திரி சந்திப்பு பொய்யானது! பேராசிரியர் ஜி. எல் பீரிஸ்!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு மீள்பரிசீலனை அறிவிப்பு!

Tamil News Live

Tamil News Group websites