ரஷ்ய முன்னாள் உளவாளி மீது நச்சுத்தாக்குதல் நடத்திய இரண்டாவது சந்தேகநபர் கைது

0
364
second suspect arrested Russian ex-spy arrested

ரஷ்ய முன்னாள் உளவாளி மீது நச்சுத்தாக்குதல் நடத்தியவர்கள் என பெயரிடப்பட்டவர்களில் இரண்டாவது நபரும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். second suspect arrested Russian ex-spy arrested

அலெக்சாண்டர் பெட்ரோவ் (வயது-39) எனப் பெயரிடப்பட்ட அவரின் உண்மையான பெயர் அலெக்ஸாண்டர் Yevgenyevich Mishkin எனவும், அத்துடன் ரஷ்ய இராணுவ புலனாய்வுப் பிரிவில் அவர் வைத்தியராக கடமையாற்றியுள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவிற்குள் நுழைவதற்காக அவர் போலி கடவுச்சீட்டை தயார்படுத்தியுள்ளார். குறித்த கடவுச்சீட்டும் அவரது உண்மையான கடவுச்சீட்டும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனில் மோதல் வெடித்த சந்தர்ப்பங்களில் பல தடவைகள் அவர் அங்கு பயணமாகியுள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் முன்னாள் உளவாளியான Sergei Skripal மற்றும் அவரது மகள் கடந்த மார்ச் மாதம் நொவிசொக் எனப்படும் நச்சுத்தாக்குதலுக்கு உள்ளாகினர்.

நரம்பை முழுமையாக செயலிழக்கச் செய்யும் குறித்த தாக்குதலின் பின்னணியில் ரஷ்யாவே செயற்பட்டுள்ளதென பிரித்தானியா தெரிவித்து, அது குறித்து தீவிர விசாரணை நடத்தியது. இதனடிப்படையில் கடந்த மாதம் இருவரது விபரங்கள் வெளியிடப்பட்டன.

அவர்களுள் ஒருவரான ருஸ்லான் பொஷிரோவ் ரஷ்ய இராணுவத்தின் கேணல் தர அதிகாரி ஒருவரென கடந்த மாதம் பெயரிடப்பட்டது. எனினும், அவரது உண்மையான பெயர் அனடொலி செபிகா என கண்டுபிடிக்கப்பட்து.

இவர்களது உண்மையான மற்றும் போலி கடவுச்சீட்டுக்கள் இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதோடு, விசாரணைகளின் பின்னர் மேலும் பல விடயங்கள் வெளியாகலாமென நம்பப்படுகிறது.

இதேவேளை, பிரித்தானியாவின் குறித்த குற்றச்சாட்டுக்களை ரஷ்யா தொடர்ந்தும் மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

tags :- second suspect arrested Russian ex-spy arrested

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

  ********************************************

தொடர்புடைய ஏனைய தளங்கள்

**********************************************