அடை மழை தொடர்கிறது! மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

0
495

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பினால் மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை அடுத்து வரும் 24 மணி நேரத்துக்கும் நீடிக்கப்பட்டுள்ளது. Bad Weather Alert Extended Sri Lanka Tamil News

களுத்தறை, பதுளை, கேகாலை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கே இந்த அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

மேலும் காலி மாவட்டத்தில் ஜின் கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் கங்கையின் தாழ்நில பிரதேசத்தின் நீர் மட்டம் அதிகரித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

நாட்டில் உருவாகியுள்ள அசாதாரண நிலைமையினால் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

12478 குடும்பங்களைச் சேர்ந்த 48918 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1348 குடும்பங்களைச் சேர்ந்த 5834 பேர் 21 பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

சீரற்ற காலநிலை : இராணுவம் தயார் நிலையில்!

மகிந்த – மைத்திரி சந்திப்பு பொய்யானது! பேராசிரியர் ஜி. எல் பீரிஸ்!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு மீள்பரிசீலனை அறிவிப்பு!

மகிந்த – மைத்திரி மீண்டும் எதிர்வரும் வாரங்களில் சந்திப்பு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி விபரம்!

Tamil News Live

Tamil News Group websites