ரோஹிங்யா அகதிகளை நாடு கடத்தும் மத்திய அரசின் முடிவுக்கு தடை

0
496
Supreme Court Refuses Stop Deportation 7 Rohingya

7 ரோஹிங்யா அகதிகளை நாடு கடத்தும் மத்திய அரசின் முடிவுக்கு தடை விதிக்குமாறு உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. (Supreme Court Refuses Stop Deportation 7 Rohingya)

டெல்லி, ஜம்மு காஷ்மீர், உத்தரப் பிரதேசம், தமிழ் நாடு உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சுமார் 40,000 ரோஹிங்கியா மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த மக்களை நாடு கடத்துவது தொடர்பான முடிவை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அரசு தொடர்ந்து வற்புறுத்தி வந்த நிலையில், முதல்முறையாக 7 ரோகிங்கியா மக்கள் நாடு கடத்தப்படுகின்றனர்.

இது இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கும் ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட முதல் பெரும் நடவடிக்கையாக பார்க்கப்படுகின்றது.

இப்போது நாடு கடத்தப்படும் 7 ரோஹிங்கியா மக்கள், இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் 2012 இல் கைது செய்யப்பட்டவர்கள் 6 ஆண்டுகளாக அசாம் சிறையில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், ரோஹிங்கியா அகதிகளை நாடு கடத்துவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. ஆனால், மத்திய அரசின் முடிவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; Supreme Court Refuses Stop Deportation 7 Rohingya