மீண்டும் நல்லாட்சி அமைச்சரவையில் மாற்றம்!

0
398

மீண்டும் நல்லாட்சி அமைச்சரவையில் மாற்றங்கள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Maithri Government Changes Ministry Sri Lanka Tamil News

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு மத்தியில், இருக்கின்ற அமைச்சுக்களை குறைப்பதற்குப் பதிலாக இன்னும் அமைச்சுக்களைக் கூட்டி அதற்கு அமைச்சர்களை நியமித்து, அதற்கான நிருவாக செலவுகளை அதிகப்படுத்துவது தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அமைச்சரவை மாற்றம் குறித்த செய்தி வெளிவந்துள்ளது.

இதன்பிரகாரம் , பாராளுமன்ற உறுப்பினர்களான ரவீ கருணாநாயக்க மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோர் மீண்டும் அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, சட்டம் ஒழுங்கு அமைச்சுக்கும், பாதுகாப்பு அமைச்சுக்கும் புதிய செயலாளர்களை நியமித்துள்ளமை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

ரஞ்ஜித் மத்தும பண்டாரவின் கீழ் உள்ள சட்டம் ஒழுங்கு அமைச்சு மற்றும் பொதுநிருவாக முகாமைத்துவ அமைச்சு என்பவற்றை பிரித்து எடுத்து புதிய அமைச்சொன்றை உருவாக்குவதற்கும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

மகிந்தவை காப்பாற்றியது நல்லாட்சியே! மங்களசமரவீர கருத்து!

அதி நவீன விசேட படையணி உருவாக்கம் தொடர்பில் நாலக டி சில்வாவிடம் சிஐடியினர் விசாரணை!

ரூபாவின் பெறுமதியைக் காப்பாற்ற பிரதமரினால் விசேட குழு

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு!

ஐ.நா வில் கடைசி நேரத்தில் உரையை மாற்றிய மைத்­தி­ரி­பால!

Tamil News Live

Tamil News Group websites