இந்தோனேசியாவில் முற்றாக அழிந்த இரு நகரங்கள்! தெருவெங்கும் சடலங்கள்

0
362

இந்தோனேஷியாவின் சுலேவேசியா தீவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சுலேவேசியாவின் தாங்கலாவில் இருந்து வடகிழக்காக 56 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழம் மையம் கொண்டு 7.5 ரிக்டர் அளவுக்கொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. Two cities totally destroyed Indonesia Corpses street

இதனையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்டதும் கட்டிடங்கள் குலுங்கியது, பொதுமக்கள் வெளியே ஓடிவந்தனர். அங்க பதட்டமான நிலை ஏற்பட்டது. அதிகமான கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளது என முதல்கட்ட தகவல்கள் வெளியாகியது. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து அங்கு தொடர்ச்சியாக நிலஅதிர்வுகளும் ஏற்பட்டது. முதல்கட்டமாக நேரிட்ட நிலநடுக்கத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 9 கிராமங்கள் பாதிக்கப்பட்டது, அங்கிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

தாங்கலாவில் பெரும்பாலான கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளது. மேலும் இந்தோனேஷியா நகரை சுனாமி அலைகள் தாக்கியுள்ளது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலு நகரை சுனாமி அலைகள் தாக்கியுள்ளது என்று பேரிடர் மீட்பு குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்பட்ட நிலையில், இந்தோனேஷியாவில் ஒரே மருத்துவமனையில் 30 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. நிலநடுக்கத்தால் சேதமடைந்த மருத்துவமனை கட்டிடத்தில் சிக்கி 30 பேரும் உயிரிழந்துள்ளதாக முதற்கட்டதகவல் வெளியாகியுள்ளது.

ஆங்காங்கே மனித உடல்கள் காணப்படுவதால் உயிரிழப்பு அதிக அளவில் இருக்கும் என்றும் அஞ்சப்படுகிறது. சுனாமி பாதித்த பகுதிகளில் மோசமான வானிலை நிலவுவதால் மீட்பு பணிகள் தொடங்கப்படவில்லை.

டோங்காலா மற்றும் பாலு நகரங்களில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

tags :- Two cities totally destroyed Indonesia Corpses street

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

எமது ஏனைய தளங்கள்