இந்தோனேசியா நிலநடுக்கம்: 384 பேர் பலி

0
329
Indonesia earthquake 384 dead
FtpTrial-AA_06082018_793898

இந்தோனேஷியாவில் உணரப்பட்ட பாரிய நிலநடுக்கம் மற்றும் அதன்பின்னர் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக இதுவரை 384 பேர் வரை உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Indonesia earthquake 384 dead

பெரும்பாலான உயிரிழப்புகள் ஆழிப்பேரலை காரணமாக இடம்பெற்றுள்ளது. கடற்கரைகளில் நின்றிருந்தவர்கள் பாரிய அலை ஏற்பட்ட போது சிதறி ஓடியதாலும், அலையில் இழுத்துச் செல்லப்பட்டும் உயிரிழந்தனர்.

இன்னும் பலர் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

7.5 ரிக்டர் பரிமாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பின்னர் இன்று (சனிக்கிழமை) காலை ஏற்பட்ட பலமான அதிர்வுகள் காரணமாக கடல் அலைகள் சுமார் 6 மீற்றர்கள் (18 அடிகள்) வரை மேலேழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்ட பலரின் உடல்கள் இன்று காலை முதல் கடற்கரைகளில் ஒதுங்குவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கரையோர சுற்றுலாத்துறை நகரான பாலுவின் (Palu) கடற்கரையில் தமது வழமையான நடவடிக்கைகளில் ஈடுபட்ட வந்த மக்கள் அங்கிருந்து உடனடியாக வௌியேற முடியாமல் போனதால் பெரும்பாலானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அனர்த்தங்களை அடுத்து 350 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக இந்தோனேஷிய அனர்த்த கட்டுப்பாட்டு முகவர் நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அங்கிருந்த பல குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பிவைத்துள்ள அதிகாரிகள், மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளனர்.

tags ;- Indonesia earthquake 384 dead

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

எமது ஏனைய தளங்கள்