ஒன்லைனில் மருந்துகள் விற்பனை செய்யக்கூடாது; கடையடைப்பு போராட்டம்

0
459
Medical shops shutdown demands no online medicine

ஒன்லைனில் மருந்துகள் விற்பனை செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் சுமார் 8 இலட்சம் மருந்து கடைகளும், தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் மருந்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. (Medical shops shutdown demands no online medicine)

ஒன்லைனில் மருந்துகள் விற்பனை செய்ய அனுமதி அளிக்கக்கூடாது என்பதை கண்டித்து ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னர் மருந்து கடைகள் மூடப்பட்டு, கடை உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

இந்த நிலையில், இன்று மீண்டும் அவர்கள் கடையடைத்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
இதுதொடர்பாக தமிழ் நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.கே. செல்வன் சென்னையில் தெரிவிக்கையில்,

ஒன்லைன் மருந்து வணிகத்தை அனுமதிக்க வரைவு அறிக்கை கடந்த மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்பட்டு இருக்கின்றது.

ஒன்லைன் மருந்து வணிகம் கூடாது. ஒன்லைன் மருந்து விற்பனை பொதுமக்களுக்கு ஆரோக்கியமற்றது. டொக்டரின் பரிந்துரையில் மட்டுமே விற்க வேண்டிய மருந்துகள் தவறான பயன்பாட்டால் நமது சமுதாயத்தை சீரழிக்கக்கூடிய சூழ்நிலை உருவாகும்.

ஒன்லைன் மருந்துகளின் ஆதிக்கம் அதிகமானால் கிராமப்புறம் மற்றும் சிறிய நகரங்களில் உயிர்காக்கும் மருந்துகள் கிடைப்பது அரிதாகிவிடும்.

ஒன்லைன் மருந்து வணிகம் நடைமுறைக்கு வந்தால், மருந்து கடை தொழிலையே நம்பி இருக்கும் 8 இலட்சம் பேர் நேரடியாகவும், 40 இலட்சம் தொழிலாளர்கள் மறைமுகமாகவும், அவர்களுடைய குடும்பத்தினரும் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்படும்.

ஒன்லைன் மருந்து வணிகத்துக்கு அனுமதி அளிக்கவிருக்கும் மத்திய அரசின் முடிவினை எதிர்த்து அகில இந்திய அளவில் ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தை இன்று நடத்துகிறோம்.

இந்தியா முழுவதும் 8 இலட்சம் கடைகள் அடைக்கப்படுகின்றன. தமிழகத்தில் 35 ஆயிரம் மருந்து கடைகள் இருக்கின்றன. இதில் வைத்தியசாலைக்குள் உள்ள 5 ஆயிரம் கடைகளை தவிர, மீதமுள்ள 30 ஆயிரம் கடைகளும் அடைக்கப்பட்டு தான் இருக்கும்.

மேலும் தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். சென்னையில் சேப் பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இன்று காலை 10.30 மணி முதல் 12 மணி வரை ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; Medical shops shutdown demands no online medicine