ட்ராவிட் எனக்காக ஒதுக்கிய 5 நிமிடங்கள் என் கிரிக்கட் வாழ்வையே மாற்றியது

0
581
younis khan talks rahul dravid

கிரிக்கெட் விளையாட வரும் இளம் வீரர்கள் சீனியர்களிடமிருந்து ஆலோசனைகள் பெற வேண்டும் எனப் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் யூனிஸ் கான் தெரிவித்துள்ளார். younis khan talks rahul dravid,tamil news cricket news,younis khan cricket news,tamil sports news, tamil news

கிரிக்கெட்டில் இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே பல முரண்கள், போட்டிகள், கோபங்கள் இருக்கலாம். ஆனால், அவை எல்லாம் களத்துக்கு உள்ளே மட்டும்தான். களத்துக்கு வெளியே எல்லாம் தலைகீழ். இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்களுக்கிடையே ஒரு நல்லுறவு, ஆண்டுகள் கடந்தும் இருந்துகொண்டிருக்கிறது என்பதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டு பாகிஸ்தான் வீரர் யூனிஸ் கானின் பேட்டி.

டிராவிட் “தற்போதைய வீரர்கள் தங்கள் முன்னாள் வீரர்களிடமிருந்தும் எதிரணி வீரர்களிடமிருந்தும் ஆலோசனைகளைப் பெறுவதை தவிர்க்கக் கூடாது. 2004 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரின்போது இந்திய வீரர் ராகுல் டிராவிட் எனக்கு வழங்கிய ஆலோசனைகளைப் பின்பற்றியதால்தான் என்னால் சிறப்பான பங்களிப்பை வழங்க முடிந்தது.

இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் மைதானத்தில் நடந்த போட்டியின்போது டிராவிட்டிடம் பேசுவதற்காக 5 நிமிடங்கள் ஒதுக்க கேட்டுக் கொண்டேன். ஒரு சீனியர் வீரர் என்ற எந்தக் கர்வமும் இல்லாமல் எனக்கான பேட்டிங் யுக்திகளை அவர் அளித்தார். அவர் அளித்த அந்த 5 நிமிட ஆலோசனைதான் என் வாழ்வை மாற்றிய தருணமாக உணர்கிறேன். இந்திய அணியில் சிறந்த இளம் வீரர்கள் பலர் இருக்கின்றனர்.

அறிமுக வீரர்கள் இதைப் போன்ற அனுபவ வீரர்களிடமிருந்து ஆலோசனைகளை எந்தத் தயக்கமுமின்றி கேட்டுக்கொள்ள வேண்டும்” என்று யூனிஸ்கான் தெரிவித்தார். ராகுல் ட்ராவிட் தற்போது ஜூனியர் இந்தியக் கிரிக்கெட் அணி மற்றும் இந்திய ஏ அணிகளுக்கு பயிற்சியாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #Tamil News #Younis khan #Dravid

younis khan talks rahul dravid

Tamil News Group websites

Tags: tamil sports news,tamil cricket news,today sports updates,tamil news sports,more sports news