ஜம்மு காஷ்மீரில் 4 பொலிஸார் மாயம்; ஆயுததாரிகள் கடத்தியிருக்கலாம் என அச்சம்

0
443
4 policemen, abducted, Jammu Kashmir, Shopian, Today India News in Tamil, Tamil News Online, Today News in Tamil, Latest Tamil News

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியானில் 3 சிறப்பு பொலிஸ் படை அதிகாரிகள், 1 பாதுகாவலர் திடீரென காணாமல் போனதால் அவர்கள் ஆயுததாரிகளால் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகின்றது. (4 policemen abducted Jammu Kashmir Shopian)

ஜம்மு காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் சிறப்பு படை பிரிவு பொலிஸ் அதிகாரிகள் 3 பேர் மற்றும் ஒரு பாதுகாவலர் இன்றைய தினம் திடீரென காணாமல் போயுள்ளனர்.

பொலிஸ் துறையைச் சேர்ந்த 4 பேரையும் ஆயுததாரிகள் கடத்திச் சென்று இருக்கலாம் என சந்தேகம் நிலவியுள்ளதனால் காணாமல் போன பொலிஸ் அதிகாரிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

அண்மைக்காலமாக சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் ஆயுததாரிகளால் கடத்திச் செல்லப்பட்டு, சுட்டுக்கொல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags;4 policemen abducted Jammu Kashmir Shopian