பாணின் விலையை 5 ரூபாவால் குறைக்க தீர்மானம்!

0
340

கோதுமை மாவுவின் விலையை மீண்டும் பழைய விலைக்கே விற்பனை செய்வதற்கு வர்த்தகத்துறை அமைச்சர் ரஷாட் பத்தியுத்தீன் இணக்கம் தெரிவித்துள்ளார்.

இதன்படி, சந்தையில் காணப்பட்ட 60 ரூபா பெறுமதியான பாண் ஒன்று மீண்டும் பழைய விலைக்கே (55 ரூபா) விற்பனை செய்யப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் ஓரிரு தினங்களில் பாணின் விலையை பழைய விலைக்கே விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்துக்கும் அமைச்சர் ரிஷாட் பத்தியுத்தீனுக்கும் இடையில் நேற்று (19) இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் அச்சங்கத்தின் உறுப்பினர் என்.கே. ஜயவர்தன அறிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

டிசம்பர் வரை எரிபொருள் விலை அதிகரிக்குமாம்! ராஜித சேனாரத்ன தெரிவிப்பு!

பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவை கைது செய்யுமாறு அழுத்தம்!

ஆங்கிலம் தெரியாததால் சிக்கலில் அனந்தி சசிதரன்!

சட்டமா அதிபர் திணைக்களத்தினால் தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் இழுத்தடிப்பு! கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

பொலிஸ் மா அதிபருக்கு எதிராக போராடுவேன்! டான் பிரசாத் தெரிவிப்பு!

Tamil News Group websites