Type to search

ஆர்ப்­பாட்­டத்­தையே செய்ய முடி­யா­த­வர்­கள் எவ்­வாறு நாட்டை முன்­கொண்டு செல்­வார்­கள்?

NEWS Top Story

ஆர்ப்­பாட்­டத்­தையே செய்ய முடி­யா­த­வர்­கள் எவ்­வாறு நாட்டை முன்­கொண்டு செல்­வார்­கள்?

Share
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அரச தலை­வர் தேர்­தலை நடந்த வேண்­டும் என்று தாமரை மொட்­டுக்­கா­ரர்­கள் கேட்­கின்­ற­னர். ஆர்ப்­பாட்­டத்­தையே செய்ய முடி­யா­த­வர்­கள் எவ்­வாறு நாட்டை முன்­கொண்டு செல்­வார்­கள்?. நாட்­டின் எதிர்­கா­லச் சந்­த­திக்கு கடன்­சு­மை­யு­ட­னான பொரு­ளா­தா­ரத்­தைக் கைய­ளிப்­ப­தல்ல எமது நோக்­கம். கட­னைச் செலுத்­தக் கூடிய பொரு­ளா­தா­ரத்­தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வதே எமது நோக்­கம். இவ்­வாறு தெரி­வித்­தார் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க. Mahinda Protest Ranil Comments

ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் 72ஆவது ஆண்டு நிறைவு நிகழ்­வு­கள் நேற்று கட்­சி­யின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தா­வில் நடை­பெற்­றன. அதில் கலந்து கொண்டு உரை­யாற்­றும்­போதே தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இவ்­வாறு தெரி­வித்­துள்­ளார். அவர் தெரி­வித்­தா­வது

2015ஆம் ஆண்டு நாம் அதி­கா­ரத்­தைக் கைப்­பற்­றி­னோம். மக்­க­ளின் அங்­கீ­கா­ரத்­து­டனே நாம் தெரி­வா­னோம். நாட்­டில் தற்­போது பல பிரச்­சி­னை­கள் தீர்க்­கப்­பட்டு வரு­கின்­றன.

பெரும் கடன்­சு­மை­யு­டன் நாம் நாட்­டைப் பொறுப்­பேற்­றோம். பல ஆண்­டு­க­ளாக உற்­பத்­தி­கள் நடக்­க­வில்லை. கடன் பெற்ற வங்­கி­களை நாம் எதிர்­கொண்­டோம். வெள்­ளத்தை எதிர்­கொண்­டோம். முன்­னை­ய­வர் தப்­பிச் சென்­றார்.

இப்­ப­டி­யான நெருக்­க­டி­க­ளுக்கு மத்­தி­யி­லேயே நாம் நாட்­டைப் பொறுப்­பேற்­றோம். எனி­னும் பல்­க­லைக் கழக மாண­வர்­க­ளுக்­கான புல­மைப் பரி­சில் தொகையை அதி­க­ரித்­தோம். கணி­னி­களை அவர்­க­ளுக்­குப் பெற்­றுக் கொடுத்­தோம். அரு­கில் உள்ள பாட­சாலை சிறந்த பாட­சாலை என்ற திட்­டத்­தின்­கீழ் 9 ஆயி­ரம் பாட­சா­லை­களை அபி­வி­ருத்தி செய்­தோம்.

4 ஆயி­ரம் அதி­பர் வெற்­றி­டங்­களை நிரப்ப நட­வ­டிக்கை எடுத்­தோம். மருந்­துப் பொருள்­க­ளின் விலை­க­ளைக் குறைத்­தோம். சுவ­செ­ரிய நோயா­ளர் காவு வண்­டிச் சேவையை ஆரம்­பித்­தோம். நாட்­டில் ஜன­நா­ய­கத்தை நிலை­நி­றுத்­தி­னோம். இவை அனைத்­தை­யும் கஷ்­ட­மான காலப்­ப­கு­தி­யில் நாம் செய்­த­வை­யா­கும்.

அம்­பாந்­தோட்டை துறை­மு­க­மும் வானூர்தி நிலை­ய­மும் அன்று பெய­ர­ள­வி­லேயே இருந்­தது. நாம் இவற்றை பொரு­ளா­தார கேந்­திர நிலை­ய­மாக இன்று மாற்றி அமைத்­துள்­ளோம். மத்­தள விமான நிலை­யத்­தை­யும் நாம் வெற்­றி­பெற செய்­வோம். இந்த விட­யங்­க­ளில் சிர­ம­மான தீர்­மா­னங்­களை மேற்­கொள்ள வேண்டி ஏற்­பட்­டது. வற் வரி அதி­க­ரி­கப்­பட்­டமை நாட்­டின் நல­னுக்­கா­கவே. கடனை செலுத்­தக்­கூ­டிய பொரு­ள­தார கட்­ட­மைப்பை கட்­டி­யெ­ழுப்­பு­வதே எமது நோக்­க­மா­கும்.

அதற்­கா­கவே கம்­பெ­ர­லிய, என்­ர­பி­ரைஸ் சிறி­லங்கா வேலைத் திட்­டங்­கள் உரு­வாக்­கப்­பட்­டன. தொழில்­வாய்ப்­புக்­கள் தற்­போது வழங்­கப்­ப­டு­கின்­றன. பிரச்­சி­னை­கள் அனைத்­தை­யும் எதிர்­கொண்டு நாடு தற்­பொ­ழுது முன்­னோக்கி பய­ணிக்­கின்­றது. 2025ஆம் ஆண்­டுக்­குக் பின்­ன­ரும் முன்­னோக்கி பய­ணிப்­போம். நாம் அனை­வ­ரும் ஒன்­றி­ணைந்து பய­ணிப்­போம்.- என்­றார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

 

Mahinda Protest Ranil Comments , Mahinda Protest Ranil Comments News


 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
Tags:

You Might also Like