பிரித்தானியாவில் திறந்து வைக்கப்படவுள்ள உலகின் மிகப்பெரிய காற்றாலை!

0
335
largest wind farm world opened Britain

பிரித்தானியாவின் வடமேற்கு கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள, உலகின் மிகப்பெரிய காற்றாலை பண்ணை இன்று (வியாழக்கிழமை) திறந்து வைக்கப்படவுள்ளது. largest wind farm world opened Britain

இந்த காற்றாலையானது, சுமார் 6 இலட்சம் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கக்கூடிய வகையிலான 659 மெகாவொட் மின்சார உற்பத்தித் திறன் கொண்டதாகும்.

145 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பில் இக்காற்றாலை அமைக்கப்பட்டுள்ள அதேவேளை, இது சுமார் 20 ஆயிரம் கால்பந்து ஆடுகளங்களுக்கு சமமானதாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டென்மார்க்கின் மிகப் பெரிய எரிசக்தி நிறுவனமான Orsted இனால் இந்த திட்டம் கடந்த 2015ஆம் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் தமது தலைமைத்துவத்தை உறுதிபடுத்திக் கொள்ளவும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உருவாக்கத்தில் சாதனைகளை பதிவு செய்யவும் உதவுவதாகவும், அதுமாத்திரமன்றி வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கும் இவ்வாறான திட்டங்கள் துணை நிற்பதாக எரிசக்தி அமைச்சர் கிளாயர் பெர்ரி தெரிவித்தார்.

இந்த காற்றாலை பண்ணையின் செயற்பாட்டு மற்றும் பராமரிப்பு பிரிவுகளில் சுமார் 250 பேர்வரை பணிக்கமர்த்தப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

tags :- largest wind farm world opened Britain

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

  ********************************************

தொடர்புடைய ஏனைய தளங்கள்

**********************************************