உலகில் ஏழு நாட்களில் 144 நிலநடுக்கங்கள்…! அடுத்து நடக்கப்போவது இதுதான்: நிபுணர்கள் எச்சரிக்கை

0
371
144 earthquakes seven days world happen experts warn

கடந்த ஏழு நாட்களில் மட்டும் உலகெங்கும் சுமார் 144 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாகவும், இது மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான அறிகுறியாக இருக்கலாம் என நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.144 earthquakes seven days world happen experts warn

வெனிசுலாவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரிக்டர் அளவில் 7.3 என பதிவான நிலநடுக்கத்தை அடுத்தே நிபுணர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.

இது மட்டுமின்றி சுமார் 70 நிலநடுக்கங்கள் Ring of Fire எனப்படும் அதிமுக்கிய பகுதியில் கடந்த 3 தினங்களில் பதிவாகியுள்ளது.

வெனிசுலாவில் பதிவான நிலநடுக்கமானது மிகவும் சக்தி வாய்ந்தது எனவும், இதன் தாக்கம் கரீபியன் கடற்பகுதியான டிரினிடாட் மற்றும் டொபாகோ தீவிலும் கிரெனடா பகுதியிலும் பதிவாகியுள்ளது.

வெனிசுலாவை அடுத்து வனுவாட்டு நாட்டில் ரிக்டர் அளவில் 6.7 என பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

15 முதல் 30 நொடிகள் நீண்ட அதிர்வுகள் ஏற்பட்டதாக கூறும் வனுவாட்டு அதிகாரிகள், பாதிப்பு எதுவும் இல்லை எனவும் தாங்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதேவேளையில் 6.3 என்ற ரிக்டர் அளவில் அடுத்த நிலநடுக்கமானது Oregan பகுதியில் பதிவாகியுள்ளது.

இது அடுத்துவரவிருக்கும் பெரிய நிலநடுக்கத்திற்கான அறிகுறியாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

மட்டுமின்றி ஆசியா மற்றும் அமெரிக்காவின் மேற்கு கடற்கரை பகுதியில் கடும் அபாயத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாகவும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

tags ;- 144 earthquakes seven days world happen experts warn

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

    ***************************************

எமது ஏனைய தளங்கள்