முதன் முறையாக அப்படியான கதாபாத்திரம் ஏற்ற சோனியா அகர்வால்..!

0
338
Sonia Agarwal Act negative Role

தமிழ் சினிமாவில் ”காதல் கொண்டேன்”, ”கோவில்” உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்த சோனியா அகர்வால், தற்போது முதல் முறையாக ஒரு படத்தில் வேறொரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.Sonia Agarwal Act negative Role

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்.. :-

ஸ்ரீ ஸ்ரீ கணேஷா கிரியேசன் என்ற பட நிறுவனம் சார்பில் ராஜேந்திரன் சுப்பையா தயாரிக்கும் படம் ”உன்னால் என்னால்”. இப் படத்தில் ஜெகா, உமேஷ் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் இயக்குனர் ஏ.ஆர்.ஜெயகிருஷ்ணா நடிக்கிறார்.

மேலும் கதாநாயகிகளாக லுப்னா, நிகாரிகா, சஹானா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் ராஜேஷ், ரவிமரியா, டெல்லி கணேஷ், ஆர்.சுந்தர்ராஜன், நெல்லைசிவா ஆகியோர் நடிக்கிறார்கள். அதிரடி வில்லி கதாபாத்திரத்தில் சோனியா அகர்வால் நடிக்கிறார்.

அத்துடன் முகமது ரிஸ்வான் இசையமைத்திருக்கும் இப்படத்தை ஏ.ஆர்.ஜெயகிருஷ்ணா இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இப்படம் பற்றி இயக்குனர் கூறும்போது.. :-

”பணம் என்பது இன்று எல்லோருக்கும் தேவையான ஒன்று தான். தேவைக்கு பணம் சேர்த்தால் பரவாயில்லை.. ஆடம்பரத்துக்கும் பகட்டுக்கும் என்று சேர்க்க நினைத்தால் குறுக்கு வழிக்குத் தான் போக வேண்டும்.

மிகப் பெரிய பணக்காரர் ராஜேஷ் அவருக்கு செக்ரட்டியாக இருக்கும் சோனியா அகர்வால், ராஜேஷை கொலை செய்து விட்டு அந்த சொத்துக்கள் அனைத்தையும் அபகரிக்க திட்டமிடுகிறார். அந்த வகையில் ஜெகா, உமேஷ், ஜெயகிருஷ்ணா ஆகிய மூவரும் வந்து சிக்குகிறார்கள்.

இந்நிலையில், இவர்களை வைத்து ராஜேஷை கொலை செய்ய சோனியா போட்ட சதி திட்டம் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பது தான் கதை. இதை வேகமான திரைக்கதை மூலம் விறுவிறுப்பாக படமாக்கி உள்ளோம்.

அமைதியான கடலுக்குள் தானே ஆக்ரோஷமான புயலும், பூகம்பமும் ஒளிந்திருக்கிறது. அது மாதிரி சோனியா அகர்வாலின் அமைதியான தோற்றத்தை மாற்றி வில்லியாக நடிக்க வைத்திருக்கிறோம். இப்படம் வித்தியாசமாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

<<MOST RELATED CINEMA NEWS>>

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரியங்கா சோப்ரா : பெரும் எதிர்பார்ப்பு..!

சிவகார்த்திகேயனின் கனா பட டீசர் ரிலீஸ் : தெறிக்கவிட்டுக் கொண்டாடும் மக்கள்..!

ஸ்ரீதேவி அக்கா சுஜாதா புற்றுநோயால் மரணம் : அதிர்ச்சியில் திரையுலகம்..!

ஐஸ்வர்யா-கழுதை, மும்தாஜ்-பாம்பு.. : மீண்டும் புதிய குழப்பத்தில் பிக்பாஸ் இல்லம்..!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ. 70 லட்சம் நிதியுதவி வழங்கிய நடிகர் விஜய்..!

ஐஸ்வர்யாவை காப்பாற்றிய யாஷிகா : கானல் நீராக மாறிய கமல்ஹாசனின் கனவு..!

கேரள வெள்ளத்தில் சிக்கித் தவித்த எங்க வீட்டு மாப்பிள்ளை சீதாலட்சுமி..!

யாஷிகா மேல் எனக்கு காதல் வந்தது உண்மைதான் : இரண்டு தோணியில் கால் வைத்த மகத்..!

Tags :-Sonia Agarwal Act negative Role