சிம்பு படத்தில் ஹிப் ஹாப் தமிழா?

0
321
Hip Hop Thamizha Simbu Movie tamil news

‘அத்தாரிண்டிகி தாரேதி’ என்ற தெலுங்கு படம் 2013ம் ஆண்டு வெளியானது. ‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாண் நடித்திருந்த இப்படத்தை த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கியிருந்தார். ஹீரோயினாக சமந்தா நடித்திருந்தார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்த இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. Hip Hop Thamizha Simbu Movie tamil news

அண்மையில் இதன் தமிழ் ரீமேக் ரைட்ஸை பிரபல தயாரிப்பு நிறுவனமான ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ கைப்பற்றியது. இதன் தமிழ் படத்தில் ஹீரோவாக சிம்பு நடிக்கவுள்ளாராம்.

தமிழில் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை சுந்தர்.சி இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் இப்படத்தை 2019ம் ஆண்டி ஜனவரி மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனராம்.

மேலும் ஒரு கூடுதல் தகவலாக, தமிழ் ரீமேக்கில் ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Hip Hop Thamizha Simbu Movie tamil news

எமது ஏனைய தளங்கள்