ககாடு கூட்டு கடற்படைப் பயிற்சியில் இலங்கை கடற்படை இணைவு!

0
645

இலங்கை கடற்படை அவுஸ்ரேலியக் கடற்படையுடன் இணைந்து கூட்டு இராணுவ பயிற்சியில் ஈடுபடவுள்ளது. Australia – Sri Lanka Navy Forces Joint Military Exercise Tamil News

அவுஸ்ரேலியக் கடற்படையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள ககாடு கூட்டு கடற்படைப் பயிற்சி எதிர்வரும், ஓகஸ்ட் 30 ஆம் நாள் தொடங்கும் இந்தக் கூட்டுப் பயிற்சி செப்ரெம்பர் 15ஆம் நாள் வரை இரண்டு வாரங்கள் நடைபெறவுள்ளது.

குறித்த பயிற்சியில் இணைந்து இலங்கை கடற்படையும் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்ரேலியாவின் டார்வின் துறைமுகத்துக்கு அப்பால் ககாடு (KAKADU) என்ற பெயரிலான இந்த கூட்டு பயிற்சியில் 26 நாடுகளைச் சேர்ந்த 24 போர்க்கப்பல்கள், 21 விமானங்கள், 2000 படையினர் பங்கேற்கவுள்ளனர்.

இந்தக் கூட்டுப் பயிற்சிக்கு முதல்முறையாக சீனக் கடற்படை போர்க்கப்பல் ஒன்றும் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites