மும்பையில் கோலாகலாமாக நடைபெற்ற பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி..! (படங்கள் இணைப்பு)

0
269
Priyanka chopra nick jonas engagement party tamil news

பாலிவுட்டின் பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி நேற்று விமர்சையாக நடைபெற்றது.Priyanka chopra nick jonas engagement party tamil news 

இது தொடர்பில் தெரியவருவதாவது.. :-

பிரபல நடிகையான பிரியங்கா சோப்ரா தமிழில் விஜய்யுடன் “தமிழன்” படத்தில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து, பாலிவுட்டில் முன்னணி நடிகையான பிரியங்கா, ஹாலிவுட் படங்கள் சீரியல்கள் என படு பிசியானார். அப்போதுதான் தன்னைவிட 10 வயது குறைவான பாப் சிங்கரும் ஹாலிவுட் நடிகருமான நிக் ஜோனாஸ் உடன் பிரியங்காவுக்கு காதல் மலர்ந்தது.

இவர்களின் காதலுக்கு இரு குடும்பத்தாரும் பச்சைக்கொடி காட்டியதையடுத்து கடந்த ஜூலை மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

நிச்சயதார்த்தத்தின் போது பிரியங்காவுக்கு வருங்கால கணவரான நிக் 2 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பில் விலையுயர்ந்த வைர மோதிரம் அணிவித்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில், இவர்களின் திருமண நிச்சயதார்த்த பார்ட்டி மும்பை ஜுஹூவில் உள்ள பிரியங்கா சோப்ராவின் வீட்டில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்க மாப்பிள்ளை நிக் ஜோனாஸ் தனது குடும்பத்துடன் நேற்று மும்பை வந்தார்.

அவர்களை பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது குடும்பத்தினர் விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றனர். இன்று நடைபெற்று வரும் நிச்சயதார்த்த விருந்துக்கு வெகு சிலருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நிச்சயதார்த்த விருந்தால் பிரியங்கா சோப்ராவின் வீடு களைகட்டியுள்ளது. மும்பை புறநகர் பகுதியில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் விருந்தினர்களுக்காக 200 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த பார்ட்டியில் ரன்வீர் சிங், கரன் ஜோகர், ரவீனா டன்டன், ஜபாரியா ஜோடி, மணீஷ் மல்ஹோத்ரா, பாடகர் சோஃபி சவுத்ரி ஆகியோர் பங்கேற்பார்கள் என தெரிகிறது. தொழிலதிபர் முகேஷ் அம்பானியும் பிரியங்கா – நிக் நிச்சயதார்த்த பார்ட்டி நிகழ்ச்சியில் பங்ககேற்கவுள்ளார் என கூறப்படுகிறது.

முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பிரியங்காவும் நிக்கும் ஜோடியாக கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

<<MOST RELATED CINEMA NEWS>>

வெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ப்ரித்விராஜ் : தாயார் பத்திரமாக மீட்பு..!

ஜனனி வீட்டில் துக்க சம்பவம் : அது தெரியாமல் பிக்பாஸ் வீட்டில் துள்ளிக் குதிக்கும் ஜனனி..!

பிக் பாஸ் இல்லத்திலிருந்து இவ்வாரம் வெளியேறும் நபர் இவர் தான் : உங்களுக்கும் பிடிக்கும்..!

சர்கார் படத்தின் ‘ரா ரா ராட்சசன்..’ பாடல் லீக் : அதிர்ச்சியில் படக்குழு..!

60 வயது மாநிறம் திரைப்பட ரிலீஸ் திகதி அறிவிப்பு..!

சர்வதேச தென்னிந்திய திரைப்பட விருது : 12 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்ட மெர்சல் படம்..!

அதர்வாவின் இமைக்கா நொடிகள் படத்தின் சென்சார் ரிசல்ட் ரிலீஸ்..!

வனமகளுக்கு வந்த மவுசு : இரண்டு, மூன்று படம் நடித்து விட்டு கோடி கணக்கில் தேவையாம்..!

Tags :- Priyanka chopra nick jonas engagement party tamil news