கவர்னர் தேர்தலில் 14 வயது பள்ளி சிறுவன் போட்டியிடுகிறார்

0
316
அமெரிக்காவின் வெர்மோண்ட் மாகாணத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் எதான் சோனே பார்ன். இவன் பள்ளியில் படித்து வருகிறான். கூடைப்பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வம் உடையவன்.14 year old boy governor election tamil news

வெர்மோண்ட் மாகாண கவர்னர் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறான். கவர்னர் தேர்தலில் சிறுவன் போட்டியிடுவது அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கலாம்.

ஆனால் வெர்மோண்ட் மாகாண மக்கள் இதை சகஜமாக எடுத்துக் கொள்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கு தேர்தலில் போட்டியிடுவதற்கான சட்ட திட்டங்கள் திருத்தப்பட்டன. அதன்படி இங்கு போட்டியிட வயது வரம்பு தேவையில்லை. வெர்மோண்ட் மாகாணத்தில் 4 ஆண்டுகள் குடியிருந்தால் மட்டும் போதும்.

தேர்தலில் போட்டியிடும் எதான் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருக்கிறான். இணையதளம் மூலம் பிரசாரம் மேற்கொண்டு வருகிறான்.

சுகாதார மேம்பாட்டு சீரமைப்பு, பொருளாதாரம் மற்றும் கல்வி வளர்ச்சி உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்துவதாக உறுதியளித்து இருக்கிறான்.

இவனை எதிர்த்து கிறிஸ்டினே ஹாஸ்குவஸ் என்ற திருநங்கை போட்டியிடுகிறார். மூத்த கடற்படை வீரர் ஜேம்ஸ் ஹெலர்ஸ் மற்றும் பிரன்டா சீகல் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

tags :- 14 year old boy governor election tamil news
மேலதிக உலக செய்திகள்
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு

எமது ஏனைய தளங்கள்