நாயாற்றில் தமிழ் மீனவர்களின் வாடிகள் தீக்கிரை; அப்பகுதியில் பதற்றம்

0
602
Mullaitivu nayaru fishermen facing issue

முல்லைத்தீவு நாயாறு பகுதியில் தமிழ் மீனவர்களுக்கு சொந்தமான 8 வாடிகள் எரிக்கப்பட்டுள்ள நிலையில், நாயாறு பகுதியில் பெருமளவு பொலிஸார் மற்றும் இராணுவம் குவிக்கப்பட்டு பதற்றமான சூழல் நிலவி வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். (Mullaitivu nayaru fishermen facing issue)

நாயாறு உள்ளிட்ட பகுதிகளில் தென்னிலங்கை அமைச்சர்களின் ஆதரவுடன், சிங்கள மீனவர்கள் வாடிகளை அமைத்து சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கு எதிராக முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் 10 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த நிலையில், நேற்று முன்தினம் முல்லைத்தீவுக்குச் சென்ற கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா, மீனவர்களுடன் பேச்சு நடத்தி, சட்டத்துக்குப் புறம்பான மீன்பிடியை தடுத்து நிறுத்துவதாக உறுதியளித்தார்.

இதனையடுத்து, முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் போராட்டத்தை இடைநிறுத்திய நிலையில், நேற்று மாலை, நாயாறு பகுதியில் உள்ள சிங்கள மீனவர்கள் மீண்டும் சட்டத்துக்குப் புறம்பான வகையில் மீன்பிடிக்க முயன்ற போது, தமிழ் மீனவர்களின் குடும்பங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தினை அடுத்து, நேற்றிரவு 11 மணியளவில் நாயாறு பகுதியில் இருந்து தமிழ் மீனவர்களின் வாடிகள், படகுகள், வலைகள் திடீரென தீக்கிரையாக்கப்பட்டன.

இதனால் எட்டு வாடிகள், இரண்டு படகுகள் மற்றும் வலைகள் உள்ளிட்ட மீனவர்களின் உடைமைகள் எரிந்து நாசமாகியுள்ளதாகவும் நாயாறு மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Mullaitivu nayaru fishermen facing issue