“மகாத்மா காந்தி புரம்” புதிய கிராமம் மக்களிடம் கையளிப்பு

0
418

இந்திய அரசின் நிதியொதுக்கீட்டில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மூலம் பூண்டுலோயா டன்சினன் தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 404 தனிவீடுகள் அடங்கிய “மகாத்மா காந்தி புரம்” புதிய கிராமம் கையளிக்கும் நிகழ்வும், பயனாளிகளுக்கான காணி உறுதிபத்திரம் வழங்கும் இன்று இடம்பெற்றது. MahatmaGhandi Puram Housing Scheme

நிகழ்வில் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்ஜித் சிங் சந்து, காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க மற்றும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வளங்கள் அமைச்சர் ரவூப் ஹக்கீம்,நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.திலகராஜ், வேலுகுமார், அரவிந்தகுமார், மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்மைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஊடாக 89.5 மில்லியன் செலவில் மின்சாரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளும், உலக வங்கித் திட்டத்தில் நகர திட்டமிடல் அமைச்சினால் குடி தண்ணீர் வசதிகளும் இவ்வீடமைப்பு திட்டத்திற்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.