முதன் முதலாக சீனாவில் வெளியாகும் விஜய்யின் தமிழ்ப் படம்

0
269
Vijay Mersal movie China release Tamil tamil news

கடந்த வருடம் விஜய் நடிப்பில், அட்லீ இயக்கத்தில் ரிலீஸான படம் ‘மெர்சல்’. நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா என மூன்று ஹீரோயின்கள் நடிக்க, விஜய் மூன்று வேடங்களில் நடித்து மகா மெகா ஹிட் கொடுத்த படம் தான் மெர்சல். ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.Vijay Mersal movie China release Tamil tamil news

தற்போது இந்தப் படமானது சீனாவில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப்படத்தில் ஜி.எஸ்.டி. போன்ற கருத்துக்கள் இடம்பெற்றிருந்ததால், பட வெளியீட்டிற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவிக்க அதுவே விளம்பரமாய் மாறி நன்றாக கல்லா கட்டியது.

உலக அளவிலும் இந்தப் படத்துக்கு கவனம் கிடைத்த நிலையில், சீனாவில் ‘மெர்சல்’ படம் திரையிடப்பட இருக்கிறது. இப்படத்தை சீன மொழியில் வெளியிடுவதற்கான உரிமையை எச்.ஜி.சி. நிறுவனம் பெற்றுள்ளது.

சீனாவில் வெளியாகும் முதல் தமிழ்ப் படம் ‘மெர்சல்’ என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Vijay Mersal movie China release Tamil tamil news

<<RELATED CINEMA NEWS>>

இஷா குப்தா சொன்ன கிரிக்கெட் வீரர் இவரா?
குறைந்த சம்பளத்துக்கு இசையமைக்க அனிருத் ஒப்புதல்!!
இதுவரை நடிக்காத வேடத்தில் நயன்தாரா
கமலின் முடிவை ஏற்க மறுத்த மகள்மார்!!

 

எமது ஏனைய தளங்கள்