37 அரசாங்க பாடசாலைகள் மூட நடவடிக்கை

0
772
37 government schools suddenly closed Sri Lanka

க.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தப் பணிகளுக்காக 37 அரசாங்க பாடசாலைகள் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (37 government schools suddenly closed Sri Lanka)

அந்த வகையில், ஓகஸ்ட் 23 ஆம் திகதியில் இருந்து செப்டெம்பர் 5 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாகவும் குறித்த பாடசாலைகள் செப்டெம்பர் 6 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

க.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தப் பணிகள் 527 மத்திய நிலையங்களில் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், இதற்காக 8,432 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் 39 பாடசாலைகளில் ஓகஸ்ட் 15 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.

இதற்காக 6,848 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரோயல் கல்லூரி, கொழும்பு – 4 இந்துக்கல்லூரி, மட்டக்களப்பு சென் மைக்கல் கல்லூரி, வவுனியா தமிழ் வித்தியாலயம், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி, கொக்குவில் இந்துக்கல்லூரி உட்பட்ட 31 பாடசாலைகளே க.பொ.த உயர்தர விடைத்தாள் திருத்தப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை திருகோணமலை விக்னேஸ்வரா மகா வித்தியாலயம், மட்டக்களப்பு இந்துக்கல்லூரி, வவுனியா தமிழ் மகா வித்தியாலயம் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி, நெல்லியடி மகாவித்தியாலயம், கிளிநொச்சி மத்திய கல்லூரி, கல்முனை ஷாஹிரா கல்லூரி உட்பட்ட 39 பாடசாலைகளில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் விடைத்தாள் திருத்தும் பணிகள் இடம்பெறவுள்ளன.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; 37 government schools suddenly closed Sri Lanka